முல்லைத்தீவில் சட்ட விரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் விபத்து
முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தில் ஈடுபட்ட வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (23.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முள்ளியவளையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தேக்கமரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு சென்று வாகனம் கேப்பாபிலவு இராணுவ படைத்தளத்திற்கு முன்னால் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது வாகனத்தில் பயணித்த சந்தேக நபர்கள் தப்பி சென்ற நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குறித்த வாகனத்திலிருந்த பெறுமதி மிக்க தேக்கமரக்குற்றிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
