காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தும் பிரான்ஸ்
தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரில் இஸ்ரேலின் தாக்குதல்களை பிரான்ஸ் கடுமையாக எதிர்ப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசி உரையாடலில் கூரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலையான யுத்த நிறுத்தத்தை உடனடியாக அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மனிதாபிமான நெருக்கடி
காசா பகுதி கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், ரஃபா நகரின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காசா பகுதியின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிராந்தியத்தில் நிலையான அமைதியை உறுதி செய்வதற்கான ஒரே வழியாக "இரு மாநில தீர்வை" ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக் கரையில் யூதக் குடியேற்றவாசிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் தாக்குதல்களை பிரான்ஸ் ஜனாதிபதி கடுமையாகக் கண்டிப்பதோடு, இஸ்ரேலிய அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் |