களுத்துறையில் மாணவி மரணம் - ஹோட்டல்களுக்கு கடுமையாகும் சட்டம்
களுத்துறையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்திற்கு முறையற்ற மற்றும் பொறுப்பற்ற முறையில் நடத்தப்படும் ஹோட்டல்களே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த களுத்துறை மாணவியின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த கோவிட் காலத்தின் பின்னர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் முகக் கவசம் அணிந்துள்ளதாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முகக் கவசம் அணிந்து வருபவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பது ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
இந்த மாணவியின் மரணம் சுற்றுலாத் துறைக்கும், ஹோட்டல் துறைக்கும் பெரும் களங்கத்தை ஏற்டுபத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும், தொழில்துறையின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்விற்காக மிகவும் கவனமாக செயல்படுமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.
தமது பொறுப்பை புறக்கணிக்கும் ஹோட்டல்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கு தமது சங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் துணைத் தலைவர் வல்கே மேலும் குறிப்பிட்டார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
