இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாணவியின் மர்ம மரணம்! பிரதான சந்தேகநபர் தொடர்பில் நாடாளுமன்றில் புதிய தகவல் (Video)
இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவியின் மர்ம மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் அரகலயவின்(போராட்டம்) களுத்துறை மாவட்ட பிரதான அமைப்பாளர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்றையதினம்(09.05.2023) நாடாளுமன்றத்தில் வைத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
குறித்த பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று காலை ஹிக்கடுவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது களுத்துறை தெற்கு பொலிஸ் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
