யாழில் முச்சக்கரவண்டி விபத்து: சாரதி வைத்தியசாலையில் அனுமதி
யாழ். (Jaffna) மானிப்பாய் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றினை முந்த முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (23.06.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் - கோப்பாய் பிரதான வீதியில் உரும்பிராய் சந்திக்கு அருகில் மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்த முற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, குறித்த முச்சக்கர வண்டி எதிரே வந்த ஹைஏஸ் ரக வாகனத்துடன் மோதி வேலிக்குள் புகுந்து குடை சாய்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து, காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan