105 ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற மூதாட்டி
அமெரிக்காவில் தனது 105 ஆவது வயதில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழக முதுகலைப் பட்டம் பெற்றுள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் 105 வயதுடைய கின்னி ஹிஸ்லோப் என்னு மூதாட்டி தனது முதுகலைப் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் இளங்கலைப் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
முதுகலை பட்டம்
அதன் பின்னர் உலக போர் காரணமாக அவரது குடும்ப பின்னணியில் ஏற்பட்ட சிக்கலானது முதுகலை பட்டதிற்க்கான கல்வியை தொடர முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதுகலை பட்டதிற்க்கான தனது ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் கின்னிக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |