மட்டக்களப்பில் சோகம்! ஆசிரியர் உள்ளிட்ட நால்வர் பரிதாப மரணம் (video)
மட்டக்களப்பு மாவட்டம் - களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 வட்டை குளத்திலிருந்து இன்றைய தினம் (12.02.2023) இவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாற்பதுவட்டடைக் குளம்
அறிவிப்பாளரும், பி.பி.கொம்.பட்டதாரியும், தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியருமான 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவதுவதாவது,
களுமுந்தன்வெளி கஜமுகன் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும், இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரம் எழுதவிருக்கும் மாணவர்களும், தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள் நாற்பதுவட்டைக் குளம் அமைந்துள்ள பகுதிக்கு இன்று (12.02.2023) சுற்றுலா சென்றுள்ளனர். ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து மதிய உணவை சமைத்து உண்டுள்ளனர்.
கூக்குரலிட்ட மாணவர்கள்
பின்னர் 3 ஆண் மாணவர்கள் அங்கிருந்த குளத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணியை எடுத்துக் கொண்டு குளத்திற்குள் சென்றுள்ளனர்.
தோணி குளத்தின் நடுவிற்குச் சென்றபோது தோணியிலிருந்த தூவாரத்தின் வழியே நீர் தோணியை நிரப்பியுள்ளது.
அதில் பயணித்த மாணவர்கள் கூக்குரலிட்டு சத்தமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியரான கிவேதன் குளத்தில் நீந்திச் சென்று மாணவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.
இச்சந்தர்ப்பத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்று 4 பேரும் மிகவும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதனால் அக்கிராமம் மாத்திரமின்றி அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
you may like this video





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
