மதுபான போத்தலுக்காக பொலிஸ் அதிகாரிகள் செய்த கொடூர செயல்
பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தின் மூன்று அதிகாரிகள் மதுபான போத்தல் ஒன்றை தரமறுத்த ஹோட்டல் முகாமையாளரை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பிரதேச ஊழல் தடுப்பு பிரிவின் இரண்டு முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் ஏழு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
12 மாதங்கள் சிறைத்தண்டனை
மதுபான போத்தல் ஒன்றை கேட்ட போது தரமறுத்த ஹோட்டல் முகாமையாளரை கடத்தி சென்று தாக்கி மற்றும் கொடூரமாக வதைகளுக்குள்ளாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தலா ரூபா 15,000 அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வழக்கில் முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட பொலன்னறுவை ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, வழக்கு நடைபெறும் போது மரணமடைந்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியாவின் தொடர் நடவடிக்கை.. லண்டன் இராணுவ கல்லூரியில் விதிக்கப்பட்டுள்ள தடை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



