இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியாவின் தொடர் நடவடிக்கை.. லண்டன் இராணுவ கல்லூரியில் விதிக்கப்பட்டுள்ள தடை
பிரித்தானிய அரசாங்கம், இஸ்ரேலுக்கு எதிராக பல்வேற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், காஸாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலியர்கள் லண்டன் பாதுகாப்புப் படிப்புக் கல்லூரியில் இணைய பிரித்தானியா தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும், அண்மையில், காஸா போர் தொடர்பாக அதன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முயன்று வருகிறது.
போர்பதற்றம்..
இஸ்ரேல் காஸா பகுதியில் தாக்குதல்களை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதாகவும் மிரட்டல் விடுத்தது. பிரித்தானியாவின் இந்த நகர்வு அடுத்த ஆண்டு இஸ்ரேலிய மாணவர்கள் ராயல் பாதுகாப்புக் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்படுவார்கள்.

காஸா சிட்டியை மொத்தமாக கைப்பற்ற இருப்பதாக ஆகஸ்டு மாதம் இஸ்ரேல் அறிவித்த நிலையிலேயே, பிரித்தானியா இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே, காஸாவில் தனது இராணுவ நடவடிக்கையை மேலும் அதிகரிக்க இஸ்ரேலிய அரசாங்கத்தின் முடிவு தவறானது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதன் காரணமாக இஸ்ரேலிய மாணவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்றார். செப்டெம்பர் மாத தொடக்கத்தில், காஸா விரிவாக்கம் தொடர்பாக பிரித்தானியா அதன் மிகப்பெரிய ஆயுத கண்காட்சியில் இருந்து இஸ்ரேலிய அதிகாரிகளைத் தடை செய்தது, ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனங்களை அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri