முல்லைத்தீவில் இரகசிய தகவலை அடுத்து விசேட அதிரடிப் படையினரால் மூவர் கைது (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த மூவரும் நேற்று (19.12.2023) கைதாகியுள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள்
34 வயதுடைய அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்கமைய 914 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்காக சென்றபோது முள்ளியவளை புதரிகுடா பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய கணவன் மனைவி இருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்து 214 கிராம் கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேடுதல் பணிகள்
இந்நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் கைதான மூவரும் இன்று (20.12.2023)முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் (18,19,20) 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே அதிகளவானவர்கள் கைதாகியுள்ளார்கள்.
ஒரு பெண் உள்ளிட்ட 31 பேர் இவ்வாறு போதைப்பொருட்களான கஞ்சா, கசிப்பு,ஊசி, மாத்திரை போன்றவற்றை விற்பனை செய்பவர்களும் அதற்கு அடிமையானவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |