இலங்கைக்கான உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ள லியாம் ஃபோக்ஸ்
இலங்கையுடனான தனது சர்ச்சைக்குரிய உறவின் காரணமாக முன்னர் பதவி விலக செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட லியாம் ஃபோக்ஸ், அண்மையில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கான பொருளாதார, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா விடயங்களை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கேமரூனின் நியமனமும் சர்ச்சை
இச்சந்திப்பானது பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளிவிவகார செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
சீன ஆதரவு கொழும்பு துறைமுக நகர திட்டத்தை முன்னாள் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் ஊக்குவித்தமை காரணமாக தற்போது கேமரூனின் நியமனமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்ட லியாம் பொக்ஸ்
முன்னைய பாதுகாப்பு செயலாளராக இருந்த லியாம் பொக்ஸ் பதவியிலிருந்து விலக 2011இல் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அத்துடன் லியாம் பொக்ஸ் இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக பணம் செலுத்தி மூன்று பயணங்களை மேற்கொண்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |