க.பொ.த உயர்தரத்திற்கான அனுமதி அட்டைகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளை மீள்பார்வை செய்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அனுமதி அட்டைகளை மீள்பார்வை செய்யும் காலம் எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை அனுமதி அட்டைகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நீங்கள் விண்ணப்பித்தது போல் பெயர் சரியாக இருக்கிறதா? பாடங்கள் சரியா? மொழி மூலம் சரியா? பிறந்த திகதி சரியா? இதில் பிழை இருந்தால் அவகாசம் கொடுத்துள்ளோம். டிசம்பர் 22 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அதற்கான நேரம் உண்டு.

https://onlineexams.gov.lk/onlineapps/ என்ற இணையதளம் ஊடாக உங்கள் அனைத்து திருத்தங்களையும் செய்யலாம். அதன் பிரதியை பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதாரம் இல்லை எகிறி பேசிய குணசேகரன், ஒரு விஷயம் கூறி ஆப் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்த வாரம் நீங்கள் OTT-யில் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்.. 800 கோடி வசூல் செய்த படமும் உள்ளது Cineulagam