கீரிமலை விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்
யாழ்ப்பாணம் (Jaffna) கீரிமலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தையொன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.
வீதியில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த இரு பெண்களைப் பின்னால் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு இளைஞர்கள் மோதி விட்டு, அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இளைஞர்கள் இருவரும் போதையில், நிதானமின்றி மோட்டார் சைக்கிளை விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வீதியில் பயணித்தோருக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவும் ஓட்டிச் சென்றனர் எனவும், அவ்வாறு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தே, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விட்டுத் தப்பிச் சென்றனர் எனவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri