அரச அலுவலகத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி : பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இரு பணியாளர்கள்
புதிய இணைப்பு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிலாவெளி கிளையில் சேவையாற்றும் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நிலாவெளி பகுதியில் நீர் விநியோகம் முறையாக இடம்பெறவில்லை என தெரிவித்து, வாடிக்கையாளர் ஒருவரினால் குறித்த அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு உரியப் பதில் வழங்கப்படவில்லை எனவும் அதனை வினவியதற்காகத் தாம் தாக்கப்பட்டதாகவும் அந்த வாடிக்கையாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 2 அதிகாரிகளையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்கவுக்கு பணித்துள்ளதாக, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை (Trincomalee) நிலாவெளி பகுதியில் உள்ள அரச அலுவலகத்தில் வைத்து பெண் ஒருவர் அதிகாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் விடுதி ஒன்றின் உரிமையாளர் எனவும் விடுதியில் நீர் துண்டிக்கப்பட்டிருந்ததால் நிலாவெளியில் அமைந்துள்ள நீர் வடிகாலமைப்பு அலுவலகத்திற்கு இது தொடர்பில் தெரியப்படுத்த சென்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இதன்போது, அங்கிருந்த அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்க மறுத்ததோடு மோசமான வாரத்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், குறித்த பெண் மீது அவர்கள் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |