அருவியில் குளித்த மூன்று பேர் மரணம்:மேலதிக விபரம்
மொனராகலை வெல்லவாய எல்லவல அருவியில் குளிக்க சென்ற மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மாத்தறையில் இருந்து வந்து இன்று மதியம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார்.
உயிரிழந்த மூன்று நபர்களும் வயது வந்த ஆண்கள் எனவும் அவர்களில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபரின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை சிறிகல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த நபர்கள் குளித்த இடத்தில் இதற்கு முன்னர் சிலர் மரணித்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த இடம் குளிப்பதற்கு உகந்த இடமல்ல என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நபர்கள் அங்கு சென்று குளித்துள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



