வெலிப்பன்னை உணவகம் ஒன்றில் மோதல்! மூவர் படுகாயம்
களுத்துறை(Kalutara ) தர்கா நகர் அருகே வெலிப்பன்னைப் பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இந்தச் சம்பவம் நேற்று(14) மாலை இடம்பெற்றுள்ளது.
மோதல்
இந்த உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்ற மூவர், உணவின் தரம் குறித்து முறையிட்டதை அடுத்து உணவக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது உணவக ஊழியர்கள் கூரிய ஆயுதங்கள் கொண்டு வாடிக்கையாளர்களைத் தாக்கியதில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து வெலிப்பன்னை பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தணிக்கும் வகையில் அப்பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |