பொருட்களுக்கான தட்டுப்பாடு! விலையை குறைக்க அரசாங்கம் திட்டம்
நாட்டில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் தலையீடுதான் காரணம் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விலையை குறைக்க நடவடிக்கை
நாட்டில் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலை உயர்வடைவது வழமையானது எனவும், அதனை குறைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பொருட்கள் தட்டுப்பாடாவதற்கு பல்வேறு நிறுவனங்களும், நபர்களும் தலையீடு செய்வதுதான் காரணம். பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்கின்றோம்.

மக்களுக்கு தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்க நிறுவனம் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றன.
குறிப்பாக சதொச நிறுவனம் மூலம் அத்தியாவசிய பொருட்கயிள் விலையை 25 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam