இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மூன்று நாடுகள் அழுத்தம்
காசா, மேற்குக்கரை மற்றும் லெபனானில் நிலவும் மனிதநேய நெருக்கடிகளுக்கு மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 'கூட்டுறவு ஒப்பந்தத்தை' (Association Agreement) இடைநிறுத்துவது குறித்து விவாதிக்குமாறு ஸ்பெயின், ஸ்லோவேனியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளன.
லக்ஸம்பர்க்கில் நேற்று(21) நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளி விவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்பெயின் வெளி விவகார அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரஸ், சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் இனியும் ஒதுங்கி நிற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக
1995ஆம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் 2-வது பிரிவின்படி, இருதரப்பு உறவுகள் மனித உரிமை மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்களால் தண்டிக்கப்படும் பாலஸ்தீனர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் புதிய சட்ட முன்மொழிவு, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் ஒரு செயலாகும் என இந்த மூன்று நாடுகளும் கூட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், காசாவில் நிலவும் தாங்கொணா துயரங்கள் மற்றும் மேற்குக்கரையில் சட்டவிரோத குடியேறிகளின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அவை கவலை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 2024 ஆம் ஆண்டு மே மாதம் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேலுடனான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளைக் கட்டுப்படுத்த இராஜதந்திர ரீதியான அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செலவு சுமார் 71 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் காஜா கலாஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam