தொடரும் அமெரிக்கா - ஈரான் முறுகல் நிலை : போர் நிறுத்தம் குறித்து வெளியான தகவல்
அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நிலைப்பாடுகளுக்கு தெஹ்ரான் பதிலளிக்காததால், அமெரிக்க துணை ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணம் இடைநிறுத்தப்பட்டதாக த நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் பயணம் எந்த நேரத்திலும் மீண்டும் தொடங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றுகையால் 28 கப்பல்கள் திரும்பிச் செல்ல
ஈரானில் இரண்டு வார கால போர் நிறுத்தம் புதன்கிழமை முடிவடைய உள்ள நிலையில், ஈரானோ அல்லது அமெரிக்காவோ அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நீண்ட கால ஒப்பந்தம் இல்லாமல் போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தாலும், பேச்சுவார்த்தைகள் எந்த நேரத்திலும் மீண்டும் தொடங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்குச் செல்வதா வேண்டாமா என்பது குறித்து ஈரான் இன்னும் முடிவு செய்யவில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ளார்.
இதற்குக் காரணம், "அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் முரண்பாடான செய்திகள், சீரற்ற நடத்தை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள்" என அவர் குற்றம் சாட்டியதாக அந்நாட்டின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB தெரிவித்துள்ளது.
ஈரான் அரசாங்கத்துடன் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் மீண்டும் குண்டு வீச அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார். “நமக்கு அவ்வளவு நேரம் இல்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானியத் தாக்குதல்களின் அச்சுறுத்தல், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ளது. இதன் காரணமாக, ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இந்த முற்றுகையால் 28 கப்பல்கள் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அமெரிக்கக் கடற்படை கூறியுள்ளது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam