பிரதமர் ஹரினி அமரசூரியவை இரகசியமாக கண்காணித்த மூவர் அதிரடி கைது
பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாகக் கூறப்படும் மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று சென்றிருந்தபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்களான மூவரையும் கொம்பனித் தெரு பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21) முன்னிலைப்படுத்தினர்.
நீதிமன்றில் முன்னிலை..
அப்போது சந்தேக நபர்களான மூவரையும் இன்று (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டதோடு, இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாளை சமர்ப்பிக்குமாறு கொம்பனி தெரு பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களான மூவரில் இருவர் சகோதரர்கள் என்றும், அவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்புப் பகுதியில் பணிபுரிவதாகக் கூறியிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித் தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.