மகிந்தவிற்கு சிலை வேண்டும் - 2029இல் சிறையில் நாமல் ஜனாதிபதி!
இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல முக்கிய அதிகாரிகளின் மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.
இது தொடர்பில் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினர் மீது சில தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டிற்கு ஜனாதிபதி ஆவாரோ இல்லையோ, சிறைச்சாலைக்கு ஜனாதிபதி ஆவார் என விமர்சித்துள்ளார்.
இவை உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,