அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை : ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சந்தேகம்
இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழலில், இதனை ஒரு ‘அமைதி மூடுபனி’ (Fog of peace) என ஆசியக் குழுமத்தின் (Asia Group) நிர்வாக இயக்குனர் அகமது ஹெலால் வர்ணித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்பதில் தெளிவு இல்லை என்றும், இரு தரப்பிலிருந்தும் வெளிவரும் கருத்துக்கள் மிகவும் போர்வெறி கொண்டதாக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க
நிலைமை சீரடைவதற்கு முன்பாக மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும், தீவிரமான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒருமுறை மோதல்கள் வெடிக்கக்கூடும் என்றும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.

ஈரானுக்குள் பல்வேறு அதிகார மையங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், கடந்த ஐந்து வாரங்களாக ஏற்பட்டுள்ள பாரிய உயிரிழப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு சேதங்கள் காரணமாக, ஈரான் அரசாங்கம் ஒரு படி பின்வாங்கிச் செல்ல விரும்புவதாக ஹெலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுரேனியம் செறிவூட்டலை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் நிலையில், ஈரான் ஐந்து ஆண்டுகள் மட்டுமே அதற்குச் சம்மதிப்பதாகத் தெரிகிறது.
இத்தகைய முரண்பாடுகளுக்கு மத்தியிலும், இரு தரப்பிலும் நிதானமான போக்கு கடைப்பிடிக்கப்பட்டால் ஒரு உடன்படிக்கையை எட்ட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam