யாழில் மூதாட்டி கொலை : அரசியல் பிரமுகரின் மகள் அதிரடி கைது
புதிய இணைப்பு
யாழ்.வடமராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் எதிர்கட்சியினை சேர்ந்த முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் மகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரின் மகளே மூதாட்டியினை கழுத்து நெரித்து கொலைசெய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களை இன்று (10.11.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் (13.10.2023)ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி- கீதன்
முதலாம் இணைப்பு
யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மூதாட்டி ஒருவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (9) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி, அல்வாய் கிழக்கு பகுதியில் கடந்த அக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கழுத்து நெரித்துக் கொலை
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று உடற்கூற்று மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா அனுப்பி வைத்திருந்தார்.
அதன் அறிக்கையில் மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மூதாட்டியை பராமரித்து வந்த இருவர் மற்றும் வீட்டு வேலையாள் அடங்கலாக மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸார் நேற்று (9) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த சந்தேகநபர்களை இன்று (10) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |