காசா பகுதியில் மனிதாபிமான போர் நிறுத்தம்...! அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மனிதாபிமான போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பது என்ற இஸ்ரேலின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.
அத்துடன், வியாழக்கிழமை முதல் மக்கள் வெளியேற அனுமதிப்பதற்கான இரண்டு மனிதாபிமான பாதைகள் உருவாக்கப்படும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
அறிக்கை
காசாவில் இஸ்ரேல் படையினர் கடந்த 34 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 10,818 பேர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10, 818 என தெரிவிக்கப்படுகின்றது.
இத் தகவலை காசா சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 4,412 பேர் சிறுவர்கள் 2,198 பேர் பெண்கள். தாக்குதல்களில் 2,650 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26,905 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காசா பகுதியில் காணப்படும் 60% வீதமான குறியிருப்புக்கள் இஸ்ரேலின் தாக்குதல்களில் தரைமட்டமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |