உணவுப் பொருட்களின் விலை குறைப்பு: அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
அடுத்த வருடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வரி வருமானம் அவசியம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிகளை அதிகரிக்க வேண்டியேற்பட்டது. அந்த அடிப்படையில் 25 சதமாகக் காணப்பட்ட சீனிக்கான இறக்குமதி வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். எனவே நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
வரி அதிகரிப்பதற்கு முன்னர் காணப்பட்ட சீனி தொகையை சில மாதங்களுக்கு 275 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும். எமக்கு வரி வருமானமும் அவசியம். நுகர்வோரின் பாதுகாப்பும் அவசியமாகும்.
2024இல் உணவு பாதுகாப்பு தொடர்பில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக உணவு பணவீக்கத்தை குறைக்கவுள்ள அதே வேளை, அடுத்த வருடத்தில் உணவு பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan