கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஏமாற்றம்
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளது.
சுற்றுத்தொடரில் இலங்கை அணி பங்குபற்றிய கடைசிப் போட்டி நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் அடைந்த படுதோல்வி காரணமாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடும் கோபத்தில் ரசிகர்கள்
இலங்கை அணியின் படுமோசமான விளையாட்டு காரணமாக ரசிகர்கள் மத்தியில் கடும் கோப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டுநாயக்க வந்த இலங்கை அணியை வரவேற்க யாரும் செல்லவில்லை எனவும் ஊடகவியலாளர்கள் சிலர் மாத்திரமே வருகைத்தந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.





சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
