யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாபெரும் களியாட்டம் (Photos)
யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற களியாட்ட விருந்து தொடர்பில் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் இந்த களியாட்ட விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய களியாட்ட விருந்து
இந்நிலையில் இவ்வாறான களியாட்டம் நிகழ்வுகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு, யாழ்ப்பாணத்திலுள்ள பல சிவில் அமைப்புகள் கோரிக்கையை விடுத்துள்ளன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மிகவும் இரகசியமாக நடைபெற்ற இந்த விருந்தில், ஒரு டிக்கட் 2000 ரூபாவிற்கும், ஜோடிகளாக கலந்து கொண்டால் நபருக்கு 1500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.
யாழ்ப்பாண கலாசாரம்
யாழ்ப்பாணத்தின் கலாசாரம் சவாலுக்கு உட்படும் வகையில் இவ்வாறான விருந்துகளை தென்னிலங்கை அமைப்புக்கள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான களியாட்டம் விருந்துகளை நடத்துவதை தடுத்து நிறுத்துவதும் அவ்வாறான விருந்துகளை நடத்துபவர்கள் மீது பொலிஸாரின் கண்காணிப்பும் மிக முக்கியம் என அந்த அமைப்புக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |