முல்லைத்தீவில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்ட மூவர் கைது (Photos)
முல்லைத்தீவு, கொக்குளாய் கடற்பகுதியில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் மற்றும் அதே பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் நேற்று சட்டவிரோதமான முறையில் வெடிபொருள் பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர், இருவரை கொக்கிளாய் கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.
புல்மோட்டை பகுதியினை சேர்ந்த இரு மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வெடிமருந்து பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினால் எடுக்கப்பட்டு ஆய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் மீதான சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை கொக்குளாய் பகுதியில் நேற்று சட்டவிரோதமான முறையில் மதுபான தாயரிப்பு இடம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொக்குளாய் பகுதியினை சேர்ந்த் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மதுபானம் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 256 லீற்றர் கசிப்பும், 360 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபரையும், சான்று பொருட்களையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

