யாழில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது (Photo)
யாழ்ப்பாணம்- அச்சுவேலி, புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்று(12.12.2023) யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு
இந்நிலையில் சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையடித்த சில பொருட்களும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த வாளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர்களை இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 10ஆம் திகதி புத்தூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு சிசிடிவி கெமரா, தொலைக்காட்சி பெட்டி, சிகரெட் பெட்டிகள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டு்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan