இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷாவிற்கு வருகைத் தந்துள்ள நடிகை ரம்பா மற்றும் பிரபலங்கள் (Video)
NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.
இவ் இசை நிகழ்ச்சியானது ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடகத்தின் பிரதான அனுசரணையுடன், முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தென்னிந்திய பாடகர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போது இலங்கைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், northern Uniயின் உரிமையாளரான இந்திரனும் அவரது மனைவி நடிகை ரம்பாவும் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
பிரபல தொழிலதிபரை சந்தித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு அவர்கள் விஜயம் செய்துள்ளதுடன் அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது ஐ.பி.சி தமிழ், லங்காசிறி குழுமத்தின் தலைவரும், புலம்பெயர் தமிழ் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கில், புலம்பெயர் தமிழரின் புதிய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு இன்று தமிழர் தாயகத்தில் ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக மாறியிருக்கும் றீ(ச்)ஷாவை பார்வையிட நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
