பிரித்தானியாவில் சீனாவுக்கு உளவுபார்த்த 3 பேர் கைது
பிரித்தானியாவில் சீனாவுக்கு(China) உளவுபார்த்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்தினை தொடர்ந்து சீனா மீது கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், லண்டனில் உள்ள சீன தூதரை அழைத்து பிரித்தானியா குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தினால் (FCDO) நேற்றையதினம் பிரித்தானியாவுக்கான சீன தூதர் ஜெங் ஜேகுவாங்குடன் பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அதிகாரிகள்
குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிரித்தானிய அதிகாரிகள், உளவு வேலை மற்றும் சைபர் தாக்குதல்களை எங்கள் நாடு ஏற்றுக்கொள்ளாது என மீண்டும் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் குற்றம் சுமத்தப்பட்ட உளவு நடவடிக்கை தொடர்பில் முழுமையான தகவல்களை பிரித்தானிய தரப்பு இதுவரை வெளியிடவில்லை.
எனினும் லண்டனில் உள்ள சீன தூதரகம் பிரித்தானியாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Foreign Ministry Spokesperson:China is gravely concerned over the arrest and prosecution of the Chinese citizens. We strongly urge the UK to earnestly protect the lawful rights and interests of Chinese citizens in the UK. pic.twitter.com/qYxqPE7S3E
— Chinese Embassy in UK (@ChineseEmbinUK) May 14, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |