இலங்கையின் உயர்நீதிமன்ற பதிவாளர் அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி
இலங்கை உயர் நீதிமன்றப் பதிவாளர் அதிகாரிகளை கொண்ட 15 பேர் குழுவொன்று புதுடெல்லியில்(New Delhi) உள்ள உயர்நீதிமன்றத்தில் நான்கு நாள் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச நீதித்துறை நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வளர்த்தல் என்ற அடிப்படையில், உயர் நீதிமன்ற பயிற்சி மையத்தின் இந்த முயற்சிக்கு இந்திய தலைமை நீதியரசர் சந்திரசூட் அங்கீகாரம் வழங்கியிருந்தார்.
நீதிமன்றச் செயல்முறைகள்
மே 9 முதல் 13 வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், இணைய - நீதிமன்றத் திட்டம், நூலகம் மற்றும் நீதிமன்றச் செயல்முறைகளான தாக்கல், பட்டியல், ஆய்வு, ஸ்கேனிங் மற்றும் பதிவு செய்தல் உள்ளிட்ட, உயர் நீதிமன்றத்தின் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மூத்த பதிவாளர்கள் இந்த செயல்முறைகள் மற்றும் அமைப்புகளை இலங்கை பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
