கோட்டாபய அரசின் முக்கியஸ்தருக்கு அமைச்சர்களால் உயிர் அச்சுறுத்தல்
கோட்டாபய அரசின் முக்கியஸ்தரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும், அமைச்சர் காமினி லொகுகேவும் ஒன்றிணைந்து என்னை தாக்குகிறார்கள்.
இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே உயிரை பாதுகாத்துக் கொள்ள பாதுக்க பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன்.
பொலிஸ் சேவையை அரசியலாக்கும் கீழ்த்தரமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சர் சரத் வீரசேகரவிடம் பல முறை எடுத்துரைத்தும் அவர் பொருட்படுத்தவில்லை.
அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்களின் செயற்பாடு வெறுக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜகத் குமார கடந்த தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக மகிந்தவிற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan