மன்னாரில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அமோக வரவேற்பு
மன்னார் நீதிமன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள் அத்து மீறி நுழைந்து கடமைக்கு இடையூறை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை
கைது செய்யப்பட்ட வைத்தியரை சனிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை நேற்றைய தினம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (7) குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அருச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வைத்தியர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அண்ரன் புனித நாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
மன்னார் நீதவானின் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார்.
இந்த நிலையில் மன்றில் இருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேற்றுள்ளனர்.
கடமைக்கு இடையூறு
பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மன்னார் - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) என தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணின் மரணத்திற்கு விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று அங்கு கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
