தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை (08) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் வேட்பாளர்களுக்கான இறுதிப் பட்டியலில் இருக்கும் நிலையில் இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார்.
உடன்படிக்கை
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது.
சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய பசுமை இயக்கம்,தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
