யாழில் சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நல்லூர் (Nallur) கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலை முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளதாக வீதி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதித் தடையானது, எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.
மேலும், வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ். மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்ப்பாணத்தை அடைய முடியும்.
அதிகாரிகளின் களவிஜயம்
இந்நிலையில் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வீதித்தடைகளை அமைப்பது தொடர்பாக இன்று துறைசார் அதிகாரிகளால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். மாநகர ஆணையாளர் என்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள் ஆகியோர் களவிஜயத்தில் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam