கொழும்பில் கடும் வாகன நெரிசல்: சொந்த ஊர்களுக்கு செல்ல குவியும் ஆயிரக்கணக்கானோர்
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் கோட்டை பிரதான பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதிகளில் இன்று (10) கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை 1,400 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை
மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக 12 சிறப்பு தொடருந்துகளை இயக்க திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (10 ஆம் திகதி) முதல் பதுளைக்கு 2 விசேட தொடருந்துகள் இயக்கப்படும் என இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 13ஆம் திகதிக்கு பின்னர் கொழும்புக்கு வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டு கஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |