சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சிலர் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாக எட்டு பேர் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடு
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - ஸ்ரதன் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மிகவும் நீண்ட நாட்களாக அனுமதி பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இந்த விசேட குற்றத்தடுப்பு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமலால் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றத்தடுப்பு பிரிவுக்கு பகுதியில் நீண்ட நாட்களாக மிகவும் சூக்சுமமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அந்த பிரிவினை சேர்ந்த விசேட குழு ஒன்று மாலை சுற்றிவளைப்பொன்றினை மேற்கொண்டு கைதுசெய்துள்ளனர்.
இதன்போது இவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் நாளை(19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



