தியாக தீபன் விவகாரத்தில் குழப்பத்திற்கு காரணமான இரு முக்கிய புள்ளிகள்..!
தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை விவகாரத்தில் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே சிவஞானம் மற்றும் மாநகரசபை முதல்வர் எடுத்த தவறான முடிவும் அணுகுமுறையும் தான் தற்போதைய குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது என தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் உருவச் சிலையை பொலிஸார் மூலம் அகற்ற முற்படுகின்றதும் அதற்கு துணை போகின்றது என்பதும் போராடிய இனத்திற்கு நாம் செய்கின்ற மோசமான பிழையாக இருக்கின்றது.
தியாக தீபம் திலீபனிற்கான அஞ்சலி விடயத்தை தடுப்பதற்கு எந்தவொரு அரசியல் தரப்பினரும் முற்படக் கூடாது.
இலங்கை அரசாங்கம் தமிழ்தேசிய விவகாரத்தில் எங்கே பிரச்சினையை உருவாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றது.அத்தோடு பொலிஸாருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கக் கூடிய ஒரு விடயமாகும்.
எனவே, இவ்வாறான ஒரு சூழ்நிலையை எங்களுடைய தமிழ்த்தரப்பு ஏற்படுத்திக் கொடுக்குமாக இருந்தால் அதை விட மிகப் பெரிய தவறு வேறு எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடந்த குழப்பங்களுக்கு காரணமான அந்த 2 முக்கிய புள்ளிகள் யார், நினைவுத் திடலில் பொலிசார் நடத்திய அடாவடியின் பின்னணியில் உள்ள இரகசியங்கள் என்ன என்பது தொடர்பான விரிவான தகவல்களை இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.