இது போராட்டத்தின் மற்றுமொரு ஆரம்பம்: பிணையில் விடுதலையான வசந்த முதலிகே சூளுரை...! (vodeo)
இது போராட்டத்தின் மற்றுமொரு ஆரம்பம் என பிணையில் விடுதலையான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (01.02.2023) பிணையில் விடுதலையான வசந்த முதலிகே, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறும் போது,
இந்த நாட்டில் தொழிற்சங்க கூட்டணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் பலர் ஒன்றாக இணைந்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக இந்த குண்டர் அரசாங்கம் மக்களின் அதிகாரத்திற்கு முன்பாக மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருக்கு சுருட்டிக்கொண்டு வீடு செல்ல நேரிட்டதன் பின்னர், இன்னொரு குண்டர் ஜனாதிபதியான ரணில், கதிரையில் அமர்ந்து கொண்டு நாட்டை நிர்வகிப்பதற்க்காக இவை செல்லம் செய்யவேண்டும் என வெற்று பேச்சுக்களை கூறி பல விடயங்களை செய்கின்றார்.
அரசாங்கம் மண்டியிட வேண்டிய நிலை
அதன் விளைவாகவே நாம் கைது செய்யப்பட்டோம். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் நாட்டில் போராட்டம் செய்வோருக்கு அடக்குமுறையை கொண்டுவந்தனர்.
எனினும் அந்த அடக்கு முறையை நாட்டுமக்கள் தோற்கடித்துள்ளனர். நாட்டின் மாணவர் அமைப்புக்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆயிரக்கணக்கான சிவில் செயற்பாட்டாளர்கள் 100 கணக்கான தொழிற்சங்க செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான தலையீடு மற்றும் ஒரு முகப்புத்தக பதிவையேனும் பகிர்ந்து போராடிய இந்த நாடு மக்களின் முன்பாக நாட்டின் அரசாங்கம் மண்டியிட நேர்ந்துள்ளது.
பரீட்சை காலத்தில் மின்சார வசதி இல்லை
நாம் அரசாங்கத்திற்கு கூறுகின்றோம். எமது பிரச்சினை ஒன்று கூட இன்னும் தீர்க்கப்படவில்லை. தேர்தலை வைத்து, மறுநாள் தேர்தல் முடிவுகள் வந்துவிடும் என்பதற்காக அரசாங்கத்திற்கு 'அலாவுதீனின் அற்புத விளக்கோ' நாட்டு மக்களுக்கு 'அலாவுதீனின் அற்புத விளக்கோ' இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கிடைக்காது.
மேலும், உயரதர பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு பரீட்சை காலத்தில் மின்சார வசதி கிடைப்பதில்லை என்பதை நாம் அறிவோம். சிறையில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகளின் பிரச்சினைகள் பற்றி நாம் அறிந்துகொண்டோம். அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
ஆனால் வரிக்கு மேல் வரி விதித்து அரசாங்கம் மக்களை குழிக்குள் தள்ளிக்கொண்டு செல்கின்றது. ஆகவே நாம் இந்த அரசாங்கத்திற்கு எதிராக முழங்காலிட தயாரில்லை. நாம் அரசாங்கத்திற்கு கூறுகின்றோம்.
இது போராட்டத்தின் மற்றுமொரு ஆரம்பமாகும். ஆகவே மக்களின் அதிகாரம் என்ன என்பதை நாம் எதிர்காலத்தில் காண்பிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.