மன்னாரில் 4 வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் கைவரிசையை காட்டிய திருடர்கள்
மன்னார் பஜார் பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் இன்று(01.11.2026) அதிகாலை திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இரண்டு நகைக்கடை மற்றும் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களில் கைவரிசையை காட்டியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குறித்த வர்த்தக நிலையங்களுக்கு மேல் பகுதியால் கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற திருடர்கள் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை வர்த்தக நிலையங்களை திறந்து பார்த்த நிலையில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு தமது வர்த்தக நிலையங்களுக்கு உள்ளே திருடர்கள் நுழைந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த நகைக்கடைகள் மற்றும் ஆடை விற்பனை நிலைய உரிமையாளர்கள் இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஈஸ்டர் தின தாக்குதல்! கோட்டாபயவிற்கு நெருக்கமானவரது மகள் உடனடி விடுதலை - வெளிவரும் சர்ச்சைக்குரிய தகவல்கள்


