முன்னாள் நிதியமைச்சர் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்: பெறுமதியான பொருட்கள் திருட்டு
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மாலின் வீட்டுக்குள் நேற்றிரவு (05) புகுந்த திருடர்கள் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் சொத்துக்களை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெவிநுவர 103 தபால் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வீட்டிலேயே இவ்வாறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கந்தரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரொனி டி மாலின் பிரத்தியேக செயலாளர் கே.எச்.வில்பிரட், பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் குழு விசாரணை
இதன்படி, பொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவின் பேரில் கந்தரை பொலிஸாருக்கு மேலதிகமாக மற்றுமொரு பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
மறைந்த ரோனி டி மாலின் இறுதிச்சடங்குகள் நடைபெற்று ஒரு வாரமாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |