ரஞ்சனின் விடுதலை குறித்து பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை - லொஹான் ரத்வத்தே
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை குறித்து பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இது குறித்து தனக்கு எவ்வித தெளிவுப்படுத்தலையோ, பேச்சுவார்த்தையோ நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ரஞ்சன் ராமநாயக்க மிக விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் கூறியிருந்தார்.
இது குறித்து கேட்கும் போதே லொஹான் ரத்வத்தே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
