பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! 2026ஆம் ஆண்டுக்கான பயண எச்சரிக்கை
பிரித்தானியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் 55 நாடுகளுக்குச் செல்வது தொடர்பில் நன்கு யோசித்து முடிவெடுக்குமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியா எச்சரிக்கை
இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, எச்சரிக்கையை மீறிச் செல்லும் பிரித்தானியர்கள் காப்பீடு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் என்றும், பிரச்சினைகள் ஏற்படும் நிலையில், உதவிக்கு யாரும் இல்லாத நிலை ஏற்படலாம் என்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு,கடத்தல் போன்ற பல காரணங்களை மேற்கொள்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளில், பிரித்தானிய தூதரகத்தை தொடர்பு கொள்வது கூட சவால் மிகுந்த விடயமாகிவிடக்கூடும் என்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.
சில நாடுகளைப் பொருத்தவரை, அத்தியாவசியம் இருந்தாலன்றி அங்கு செல்லவேண்டாம் என்றும், சுற்றுலா திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறும் மக்களை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சில நாடுகளுக்கு, அங்கு செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறு, அதாவது, அந்த நாடுகளுக்கு பிரித்தானியர்கள் செல்லவேவேண்டாம் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.
நாடுகள்
1. ஆப்கானிஸ்தான் - அங்கு எப்போதுவேண்டுமானாலும் பாதுகாப்புச் சூழல் மாறலாம்.
2. பெலாரஸ் - நீங்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.
3. பர்க்கினா ஃபேசோ - தீவிரவாத தாக்குதல் மற்றும் கடத்தப்படும் அபாயம்.

4. ஹைதி - அங்கு எப்போதுவேண்டுமானாலும் பாதுகாப்புச் சூழல் மாறலாம்.
5. ஈரான் - பிரித்தானியர்கள் கைது செய்யப்படும் அபாயம்.
6. மாலி - அங்கு எப்போதுவேண்டுமானாலும் பாதுகாப்புச் சூழல் மாறலாம்.
7. நைஜர் - தீவிரவாத மற்றும் குற்றவியல் கடத்தல்கள் அதிகரித்துவருகின்றன.
8. ரஷ்யா - உக்ரைன் ஊடுருவல் தொடர்பில், தொடரும் அபாயங்களும் அச்சுறுத்தல்களும்.

9. தெற்கு சூடான் - ஆயுத வன்முறை மற்றும் குற்றச்செயல்கள் அபாயம்.
10. சிரியா - தொடரும் மோதல்கள் மற்றும் அங்கு எப்போதுவேண்டுமானாலும் பாதுகாப்புச் சூழல் மாறலாம்.
11. ஏமன் - அங்கு எப்போதுவேண்டுமானாலும் பாதுகாப்புச் சூழல் மாறலாம்.
எனவே, இந்த நாடுகளை முற்றிலும் தவிர்க்குமாறும், மற்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது, பிரித்தானியாவின் பயண ஆலோசனைகளை கவனித்து அதன்படி பயணங்களை திட்டமிடுமாறும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.