சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை சந்தையில் எவ்வித எரிவாயு தட்டுப்பாடும் இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
விநியோக நடவடிக்கை
லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை. தற்போது 3,900 மெற்றிக் டன் எரிவாயுவைக் கொண்ட கப்பலொன்று மாலைத்தீவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதற்கமைய, தற்போது எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

வழமை போல் பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 2027ஆம் ஆண்டிற்கான எல்.பி.ஜி விநியோக ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan