சாந்தன் நாடு திரும்ப தடை எதுவும் இல்லை: வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம்
சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திர ராசா மீண்டும் நாடு
திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி
சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06.02.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இரு நாடுகளிலும் இருந்து சாந்தன் இலங்கை திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், அவர் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் இல்லை என்பதுடன், இலங்கை அரசு எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, எந்தச் சந்தர்ப்பத்திலும் சாந்தனுக்கு நாடு திரும்ப முடியும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா





வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Viral Video: உலகத்துல இப்படியொரு சிறிய டிசைனரை பார்த்திருக்கவே மாட்டீங்க... தங்கைக்கு வடிவமைத்தை ஆடையைப் பாருங்க Manithan
