தகாத உறவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்
சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உறவில் ஏற்பட்ட தகராறு
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மாவத்தகம, உதனகம என்ற இடத்தில் வேனில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இருவர் மீது தாக்குதல்
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை வழிமறித்து வேனை நிறுத்தி தடியால் தாக்கிய பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் கொகரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 மற்றும் 53 வயதுடையவர்களாவர்.
இதேவேளை, தங்காலை பகுதியிலும் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்காலை – குடாவெல்ல பகுதியில் வசிக்கும் கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டுக்குள் நுழைந்த சிலர் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளதாக அப்பகுதி பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri