தேராவில் விவசாயப் பண்ணையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - வடக்கு ஆளுநர்

Sri Lanka Army Mullaitivu Sri Lanka Elephants
By Shan Oct 02, 2026 06:15 AM GMT
Report

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தேராவில் விவசாயப் பண்ணையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அங்கு விவசாய நடவடிக்கைகளை மீளச் சீரமைத்து விரிவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

தேராவில் விவசாயப் பண்ணையில் தலா ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட வாழைச்செய்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில், அங்கு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்த விவசாயிகள் வட மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, ஆளுநர் நேற்றைய தினம் (01.10.2026) நேரடியாக தேராவில் விவசாயப் பண்ணைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் தேராவில் விவசாயப் பண்ணை விவசாய நடவடிக்கைகளுக்காக இயங்கி வந்தது.

வாழைச்செய்கைக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட காணி

அதைமேலும் வினைத்திறனாக்கும் நோக்கில், கடந்த ஆண்டு 40 ஏக்கர் காணி விவசாயிகளுக்கு வாழைச்செய்கைக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டு வழங்கப்பட்டது. எனினும், போதிய நீர் விநியோக வசதி இன்மை மற்றும் யானைகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் எதிர்பார்த்த பயனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தேராவில் விவசாயப் பண்ணையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - வடக்கு ஆளுநர் | Theravil Agricultural Farm And Expand Agricultural

குறிப்பாக, யானைத் தடுப்பு வேலி உரிய முறையில் அமைக்கப்படாததுடன், விவசாயத்துக்குத் தேவையான போதிய நீராதாரமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டினர். யானைகள் விவசாயப் பகுதிக்குள் நுழைந்து தடுப்பு வேலியை சேதப்படுத்தியதுடன், காய்ப்பிற்கு வந்திருந்த வாழை மரங்களை அழித்ததாகவும், அதனைத் தொடர்ந்து கால்நடைகள் விவசாய நிலத்துக்குள் நுழைந்து எஞ்சிய பயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்தியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க, யானைத் தடுப்பு வேலியை முறையாக அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், விவசாயத்துக்குத் தேவையான நீரை ஒழுங்குபடுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்த ஆளுநர், நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

தேராவில் விவசாயப் பண்ணையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - வடக்கு ஆளுநர் | Theravil Agricultural Farm And Expand Agricultural

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

குறிப்பாக, யானைத் தடுப்பு வேலியை முறையாக அமைத்தல், தேவையான நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் உரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேவேளை, ஏற்கனவே ஏற்பட்டுள்ள பயிர்ச்செய்கை இழப்புகளை கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய குறுகிய காலப் பயிர்ச்செய்கை வாய்ப்புகள் தொடர்பிலும் ஆராயுமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.

தேராவில் விவசாயப் பண்ணையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - வடக்கு ஆளுநர் | Theravil Agricultural Farm And Expand Agricultural

தேராவில் விவசாயப் பண்ணையின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த ஆளுநர், பண்ணையில் காணப்படும் குறைபாடுகளை ஒவ்வொன்றாக அடையாளப்படுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதன் ஊடாக, இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆளுநரின் இக் களப்பயணத்தின்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் டென்சியா கிரிதரன், வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன், விவசாயப் பண்ணை முகாமையாளர், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேராவில் விவசாயப் பண்ணையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - வடக்கு ஆளுநர் | Theravil Agricultural Farm And Expand Agricultural

ஈரான் தொடர்பில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

ஈரான் தொடர்பில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US