பாதுகாக்கப்பட்ட வனங்களில் நடக்கும் திருட்டு: பொட்டிழந்த மங்கை போலாகும் அவலம் (Photos)
இலங்கையில் அதிகளவான இயற்கைக் காடுகளைக் கொண்ட மாவட்டம் முல்லைத்தீவு ஆகும். மக்கள் தொகையில் குறைந்த போதும் காடுகளில் நிறைந்த மாவட்டமாக முல்லைத்தீவு இருக்கிறது.
நாகஞ்சோலை, கூழாமுறிப்பு, ஆண்டான்குளம் போன்ற சில ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் காடுகளின் பெயர்களை குறிப்பிடலாம்.
காடுகளைக் குறிக்கும் பெயர்ப் பலகைகள்
இத்தகைய ஒதுக்கப்பட்ட வனங்களை பெயரிட்டு அதனை இனம் காணவும், அது தொடர்பான பணிகளின் போது அந்த காட்டினை குறியிட்டுப் பேசுவதற்கும் இலகுவாக இருப்பதற்கு பெயர்ப் பலகைகள் வைக்கப்படுகின்றன.
வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு இந்த பணியினை முன்னெடுக்கின்றது. காட்டின் எல்லைகளில் இந்த பெயர்ப்பலகை வைக்கப்படுகிறது.
வியாபார நிலையங்கள், ஆலயங்கள், வீதிகள், வேலையிடங்கள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் பெயர்ப்பலகை வைக்கப்படுவதனை அவதானிக்கலாம்.
குறித்த இடமொன்றைத் தேடிச் செல்லும் ஒருவருக்கு பெயர்ப்பலகை இருந்ததால் அந்த இடத்தினை இலகுவாக சென்றடைந்து விடுகின்றார்.
இலங்கை போன்ற சுற்றுலா வருமானத்தை அதிகம் ஈட்டும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடங்களை குறிக்கும் பெயர்ப் பலகைகளை வைத்து அவற்றைப் பேணி வருவது வருமானத்தை ஈட்டும் முயற்சிகளில் ஒன்றாக அமைந்துவிடும் என்பது நடைமுறை அவதானமாகும்.
பொட்டிழந்த மங்கை போல்
தமிழ்ப் பாரம்பரியங்களில் பெண்கள் சார்ந்த முதன்மையான கலாச்சாரப் பண்பு நெற்றிப் பொட்டிடலாகும். சந்தனப் பொட்டினை ஆண் - பெண் இரு பாலரும் ஆன்மீக வழிமுறையில் நெற்றியில் வைத்துக் கொள்கின்றனர்.
திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் கறுத்தப் பொட்டினை வைத்து கொள்வார்கள்.
கழுத்தில் தாலியும் நெற்றியில் குங்குமமும் இலட்சுமி கடாச்சமாம் என்ற நம்பிக்கை தமிழரிடம் இருக்கும் வழக்கம் ஆகும்.
பொட்டிழத்தல் என்பது ஒருவர் தன் அழகை, பொலிவை இழப்பதாகும்.
காணாது போகும் பெயர்ப்பலகைகள்
ஒதுக்கப்பட்ட வனங்களை பாதுகாக்க வேண்டியது அரசு மட்டுமல்ல. அந்த வளங்களைச் சூழ்ந்துள்ள பொதுமக்களும் தான்.
ஒரு நாட்டில் காட்டின் அளவு அந்த நாட்டின் மொத்தப் பரப்பளவில் நாலிலொரு பங்கு இருத்தல் அவசியம் என்பது அறிவியல் நோக்கு.
எனினும் அத்தகைய போக்கு பல நாடுகளில் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இங்கே இலங்கையில் ஒதுக்கப்பட்ட வனங்களினுள் பயன்மிகு மரங்களை திட்டமிட்ட முறைமையில்லாதவாறு வெட்டிச் செல்கின்றனர்.
இப்போது பெயர்ப்பலகைகளை அகற்றி அதனை பொருத்துவதற்கு பயன்படுத்திய இரும்பு கம்பிகளையும் எடுத்துச் செல்கின்றனர்.
சிக்கல்
பெயர்களை அறிந்து கொள்ள முடியாத இக்காடுகளால் இயற்கை வனங்களில் ஆய்வினை மேற்கொள்ள முற்படும் மாணவர்கள் மற்றும் காடுகளை இனம் காண முயலும் பயணிகள் எதிர் நோக்குகின்றனர்.
தண்ணீரூற்று - நெடுங்கேணி - புளியங்குளம் வீதியில் முள்ளியவளைப் பகுதிக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் இருந்த கூழாமுறிப்பு B மற்றும் நாகஞ்சோலை காடுகளைக் குறிக்கும் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டுள்ளதோடு அவை பொருத்தப்பட்டிருந்த கம்பிகள் அகற்றப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சில முதியவர்கள் பொதுத்தன்மையுடைய கருத்தினைக் கொண்டிருந்தனர். இரும்பின் விலையேற்றத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்றனர்.
நம் நாடும் காடும் நமக்கு இரு கண் போலாகும்
காட்டு வாழ் விலங்குகள் மற்றும் தாவரங்கள் நுண்ணங்கிகளின் மிகப்பெரிய வாழிடமாக இயற்கைக் காடுகள் இருப்பதனை உற்று நோக்க வேண்டும். இயற்கைச் சமனிலைக்கும் மனித வாழ்வின் தொடர்ச்சிக்கும் காடுகள் மிக அவசியமான கூறுகளாக இருக்கின்றன.

பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ள விடயம்! நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை(Photos)
மீள் வனமாக்கல் ஒருபுறம் நடந்தேறும் போது இயற்கை காடுகளை அழிப்பதும் அவற்றை பாதுகாக்கும் முயற்சிக்கு இடையூறு செய்வதும் பொருத்தமற்ற முன்னெடுப்புக்களாகும் என்பதை நாமெல்லாம் உணர்ந்து செயற்பட வேண்டும் என சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் தங்கள் ஆதங்கத்தை இது தொடர்பில் வெளிப்படுத்தியமையும் நோக்கத்தக்கது.
நாடும் காடும் நம்மிரு கண்கள் போலாகும் என்று மேலும் குறிப்புரைத்தனர். பெயர்ப்பலகைகளை அகற்றி கம்பிகளை எடுத்துச் செல்லலை தவிர்க்கும் மனநிலை மேலோங்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
