புதிய பொலிஸ் மா அதிபர் நியமிப்பு குறித்து வெளியான தகவல்
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரட்னவின் பதவி காலம் முடிவடைந்தமையை கருத்திற்கெண்டு மீண்டும் ஒருமுறை அவருக்கே சேவை நீடிப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றுடன் (09.10.2023) பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரட்னவுக்கு அவருக்கான முன்னைய சேவை நீடிப்பு காலம் முடிவடைகிறது. தற்போதைய சி.டி. விக்கிரமரத்ன, பொலிஸ் சேவையில் இருந்து 2023 மார்ச் 26 இல் ஓய்வு பெறுவார் என முதலில் கூறப்பட்டது.
எனினும் அவரது பதவிக்காலத்தை ஜூன் 26 ஆம் திகதி வரை மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதி நீடித்தார்.
முரண்பாடுகள் ஏற்படும் அபாயம்
பின்னர் ஜூலை 09 ஆம் திகதி வரை மேலும் 03 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதா அல்லது தற்போதைய அதிபர் விக்ரமரத்னவுக்கு வேறு சேவை நீடிப்பு வழங்குவதா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, விக்கிரமரத்ன மேலும் அதே நிலையில் தொடர்ந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டால், பொலிஸாருக்குள் சில முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பல தரப்பினரும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
